Friday, March 4, 2011

நிலாச் சோறு

கஜினியின் முயற்சியோ தன் வாழ்நாளில்-

ஈரேழுடன் மூன்று முறை தான்!


இவளின் முயற்சியோ தினமும்-

ஈரிரு பொழுதுகளில் சில நூறு!

அதில் பொய்களின் எண்ணிக்கை பல நூறு!


சிங்கரா சென்னை முதல் சிவப்பு செவ்வாய் வரை

சென்று வருகிறாள் - தன் கற்பனைகளில்!


இவள் சொல்லும் கதைகளின் கற்பனைகளை

எட்ட விஞ்ஞானம் உழைக்க வேண்டி

இருக்கும் இன்னும் சில நூற்றாண்டு!


பூச்சாண்டி முதல் கண் குத்தும்

சாமி வரை அழைக்கிறாள் - உதவிக்கு!


இவளின் இத்தனை முயற்சியும்

வேறேதர்க்கும்மல்ல?


தன்னையே உலகமென நினைத்து

இடுப்பை அதிகம் பற்றிக் கொண்டிருக்கும்

தன் குழந்தைக்கு

"ஒரு வாய்ச் சோறூட்டவே"!

- பாலாஜி இராமச்சந்திரன்